மில்கோ நிறுவனத்தின் நாளாந்த பாலுற்பத்தியை 10 இலட்சம் லீற்றர்களாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அம்பேவெல கைத்தொழிற்சாலையில் 3 1/2 இலட்சம் லீற்றர் பால் மூலமான தயாரிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று கிராமிய பொருளாதாரத்துறை அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, உயர்தரத்திலான 2500 கறவைப் பசுக்கள் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
கால்நடை உற்பத்தியாளர்களுக்கு பாலை விற்பனை செய்வதில் இதுவரை எந்தவித பிரச்சினைகளும் இல்லை. மில்கோ நிறுவனத்திற்கு மேலதிகமாக நெஸ்லே, பெல்வத்த நிறுவனங்கள் பாலைக் கொள்வனவு செய்கின்றன. சிறிய வர்த்தகர்களும் இதில் பங்குகொள்கின்றனர்.
படல்கம என்ற பிரதேசத்தில் புதிய பாலுற்பத்தித் தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் பி.ஹரிசன் மேலும் தெரிவித்தார்.
(rizmira)