மில்ஹானை கைது செய்ய சிவப்பு எச்சரிக்கை உதவியது – இன்டர்போல்

(FASTNEWS | COLOMBO) – துபாயில் கைதாகி நேற்று(14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட தேடப்பட்டு வந்த தலைவர்களில் ஒருவனான முஹமட் மில்ஹானை கைது செய்ய சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டதாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் பொதுச்செயலாளர் யோகன் ஸ்டோக் தெரிவித்திருந்தார்.

மேலும் சந்தேக நபர்கள் 04 உடன் முஹமட் மில்ஹான் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்றான் ஹஷீமின் நெருங்கிய சகாக்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் வவுணதீவு பொலிசார் கொலையின் முக்கிய சந்தேக நபர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று(14) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கைதான நான்கு பேரதும் விபரங்கள் வருமாறு;

ஹயாத்து மொஹம்மது அஹம்மட் மில்ஹான் வயது 30 – புதிய காத்தான்குடி, FC வீதி
மொஹம்மட் மர்சூக் மொஹம்மட் ரிழா, வயது 34 – சம்சம் வீதி, மருதமுனை 03
மொஹம்மட் மொஹிதீன் மொஹம்மட் சன்வாஸ் சப்ரி, வயது 45 – சாராஸ் கார்டன், வெல்லம்பிட்டி
மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் இல்ஹாம், 29 வயது – கபூரடி வீதி, காத்தான்குடி 01
அபூசாலி அபூபக்கர், வயது 37 – எல்லவெவ, ஹிஜ்ராபுரம், கெபிதிகொல்லாவ