மிஸ்பா உன்னை கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்கவில்லையே – ஷோயிப் அக்தர் கிண்டல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று பெயர் பெற்ற மிஸ்பா உல் ஹக்கைத் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதனன்று அறிவித்த நிலையில் இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கிண்டல் செய்துள்ளார்.  

அத்துடன் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில், முன்னாள் வீரர் வக்கார் யூனுஸைப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் பதவியிலும் ஏன் உங்களை நியமிக்கவில்லை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக்கை முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

“பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் என இரட்டைப் பதவிகளுக்கு வாழ்த்துக்கள் மிஸ்பா உல் ஹக். இத்துடன் சேர்த்து அவரை ஏன் அப்படியே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் நியமிக்கவில்லை என்று ஆச்சர்யமாக உள்ளது. ஹா ஹா ஹா ஹா! நான் விளையாட்டுக்குச் சொன்னேன். முன்போலவே  அவர் ஆச்சர்யங்களை நிகழ்த்துவார் என்று நம்புகிறேன்.,.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.