மீடியாகொட பகுதியில் வேன் ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு…

காலி – மீடியாகொட பகுதியில் வேன் ஒன்று புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த வேன் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று(30) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மீடியாகொட மற்றும் தெல்வத்த பிரதேசங்களை சேர்ந்த 37 மற்றும் 49 வயதான இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.