பாரியளவில் கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டாலும், இது குறித்து பிரேஸில் தூதரகத்திடம் விசாரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரேஸிலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி கொள்கலன்களிலிருந்து பாரியளவில் கொக்கேய்ன் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த விடயம் குறித்து பிரேஸிலுக்கான இலங்கைத் தூதரகத்திடம் அதிகாரிகள் வினவவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் நான்கு சந்தர்ப்பங்களில் பாரியளவில் கொக்கேய்ன் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
கடந்த வியாழக்கிழமை இருநூறு கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.
பிரேஸிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனிக் கொள்கலன் ஒன்றில் மறைத்துக் வைக்கப்பட்டிருந்த போது இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பிரேஸிலுக்கான இலங்கைத் தூதரத்தின் உதவியுடன் அங்கிருந்து போதைப் பொருள் அனுப்பி வைப்போர் பற்றிய விபரங்களை திரட்டி நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியமுண்டு எனவும், இதுவரையில் அதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.