கடந்த 2013 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதிக்கான அமைப்பாளராகவும், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளராகவும் பதவிவகித்த ஏ.எம்.எம்.நௌசாட் அவர்கள்,எந்தவொரு சம்மாந்துறை மகனிடமும் கலந்தாலோசிக்காமல் தனி ஒருவராக இருந்து சம்மாந்துறைக்கான வட்டார வரைபை முட்டாள்தனமாகவும் துரோகத்தனமாகவும் வடிவமைத்து சட்டமாக்கிய கதை யாவரும் அறிந்ததே.
அவ்வாறே அதனைச் சரிசெய்ய எடுத்த எமது அனைத்து முயற்சிகளையும் ஐ.ம.சு.முன்னணியின் அமைப்பாளர் பதவியைப் பயன்படுத்தி முறியடித்த கதையும் வரலாற்றுப் பதிவாகும்.
இவ்வாறு எமது மண்ணை குறுட்டுத் தனமாக தாரைவார்த்த இவ் வரலாற்றுத் துரோகத்தில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருந்த எமக்கு அண்மையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முற்சித்த எம் போன்றோர்களை ஒன்றுகூட்டி ஒருமித்த அமைப்பி்லே அதற்கான பிரேரணையை வடிவமைக்க எமது நம்பிக்கையாளர் சபை எடுத்த நடவடிக்கையின் பிரகாரம் ஏகோபித்த முறையில் வரையப்பட்ட பிரேரணைகளை சரிபார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 2வது கூட்டம் கடந்த 2022.11.21 ஆம் திகதி சம்மாந்துறை பெரிய ஜும்மா பள்ளிவாசல் காரியாலயத்தில், நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கண்ணியத்திற்குரிய மௌலவி றம்ஷின் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்திற்கு மாத்திரமன்றி அதற்கு முன்னரான முதலாவது கூட்டத்திற்கும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் கௌ. ஏ.எம்.எம்.நௌசாட் அவர்கள் அழைக்கப்பட்டுருந்தபோதும் அன்னார் இரண்டு கூட்டங்களையுமே நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போதாதென்று ஊரையும் ஊரின் நம்பிக்கையாளர் சபை மற்றும் புத்திஜீவிகளையும் உதாசீனம் செய்து,பிரதேச சபை உறுப்பினர்களை பிழையாக வழிநடாத்தி மீண்டுமொரு கா(கூ)ட்டிக் கொடுப்பைச் செய்துள்ளார் எமது தவிசாளர். இதனை முறியடித்து சகோதர தமிழ் சமுகத்திற்கு உரித்தான சரியான பங்கையும் வழங்கி, மிகச்சரியான எமது பிரேரணையை வென்றெடுக்கும் எமது முயற்சி வெற்றிபெற பிராத்தியுங்கள்.