கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு அர்ஜுன ரணதுங்கவை நியமிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலுக்கு அர்ஜுன ரணதுங்கவை நிறுத்தி அவரை வெற்றியடையச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால மீண்டும் குறித்த பதவிக்காக போட்டியிடவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.