மீண்டும் சூர்யா படத்தில் ஜோதிகா

(FASTGOSSIP|COLOMBO) – ‘ராட்சசி’ படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கல்யாண் இயக்கத்தில் ’ஜாக்பாட்’ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தையும் சூர்யா தயாரிக்கிறார். இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்குகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ என பெயரிடப்பட்டுள்ளது.