நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நுளம்புப் பெருக்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை சுத்தப்படுத்துவது அவசியம் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.