மீண்டும் திரையுலகில் நஸ்ரியா நசீம்…

மலையாளத்தில் பலுங்கா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நஸ்ரியா நசீம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இவர் தமிழில் ராஜா ராணி, நேரம், திருமணம் எனும் நிஹ்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இதற்கிடையில் நஸ்ரியாவின் எடை கூடிய புகைப்படங்களை பதிவிட்டு, மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.

இதையடுத்து கடின உடற்பயிற்சி மேற்கொண்டு, பழைய கட்டுடலுக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் நடிக்க உள்ளதாக, தனது பேஸ்புக்கில் நஸ்ரியா பதிவிட்டுள்ளார்.

அதில், பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தது முதலே ‘அடுத்த படம் எது?’ என எல்லோரும் கேட்பார்கள்.

அதற்கான பதில் இதோ. மீண்டும் நடிக்க வருகிறேன். பிரித்திவிராஜ், பார்வதி நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன்.

அந்தப் படத்தை அஞ்சலி மேனன் இயக்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.