தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மின்னேரியா தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவே இவ்வாறு குறித்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மின்னேரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வரை தாக்கிவிட்டு சந்தேக நபர் ஒருவரை காப்பாற்றிச் சென்ற சம்பவத்தை அடுத்து மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.