மீண்டும் பிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தெரிவாகியுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து விலகியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகவும் பரபரப்புக்கு இடையே இந்தத் தேர்தல் ஜூரிக் நகரில் நடைபெற்றது.

முதல் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், போட்டி இரண்டாம் சுற்றுக்குச் தள்ளப்பட்டது.

எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, அலி பின் அல் ஹுசைன் விலகுவதாக தெரிவித்த பின்னர், பிளாட்டர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவர் ஐந்தாவது முறையாக ஃபிஃபா அமைப்பின் தலைவராக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.