பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டுமொரு முறை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நெருங்கும் தருவாயில், இனவாதத்தை அடிப்படையாக கொண்டு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை அடுத்தே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க போவதில்லை என்று ஜனாதிபதி ஏற்கனவே ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை விட மகிந்த ராஜபக்சவுக்கு இந்த உரையின் மூலம் பாரிய தாக்குதலை தொடுக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதியின் இந்த உரையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு வீதம் பாரியசரிவை சந்திக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தான் மைத்திரி – மகிந்த அரசை உருவாக்க போவதாக மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்து வருகிறார்.
இனவாதிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க போவதில்லை எனவும் மகிந்த கூறி வருகிறார். இந்த நிலையில், தான் இனவாதி ஒருவருடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால அறிவிக்க உள்ளதாக பேசப்படுகிறது.
ஜனாதிபதி என்ற வகையில், இன ஐக்கியம் தொடர்பில் தனக்குள்ள பொறுப்பு குறித்து கவனம் செலுத்தி ஜனாதிபதி இந்த உரையை ஆற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(riz)