மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்…

விஜய் – முருகதாஸ் இணையும் தளபதி 62 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து இது விஜய் – முருகதாஸ் இணையும் மூன்றாவது படமாகும். இப்படத்தின் கதைக்கு திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. இப்படம் விஜய்யின் 62வது படமாக உருவாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர்ட் டைரக்டராக சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.