கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவை அடுத்த மீட்பு பணிகள் இன்று(20) 7ம் நாளாகவும் தொடர்வதாக, இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று(19) மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின் போது யாருடைய சடலமும் மீட்கப்படவில்லை.
மீட்பு பணிகளுக்காக காவற்துறையினரும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த இந்த சம்பவத்தில் இதுவரையில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1059 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 32 பேர் பலியானதோடு,11 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் காணாமல் போய் இருப்பாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.