மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தம் தொடர்பான ஜப்பானிய தொழில்நுட்ப குழுவினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(24) கையளிக்கப்பட்டுள்ளது.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஜப்பானிய தொழில்நுட்ப குழுவினர் இலங்கைக்கு வருகை தந்தனர்.
குறித்த ஜப்பானிய தொழில்நுட்ப குழுவினர், ஜனாதிபதியை ஜனாதிபதி மாளிகையில் இன்றைய தினம் சந்திக்கவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று மீதொட்டமுல்லயில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இது வரை 32 பேர் உயிரிழந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.