மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையால் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதோடு, மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
—————- UPDATE
மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் மற்றுமொரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதும் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் இடம்பெற்றுகின்ற நிலையில் 1,500 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அகழ்வு இயந்திரங்கள் 12, டிப்பர் வாகனங்கள் 15உம்; பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ண குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த அனர்த்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களுள் 6 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.