மீதொட்டுமுல்ல அனர்த்தம் குறித்து நேரகாலத்தோடு அறிவித்திருந்தோம் – அரசு அறிவிப்பு..

கொலன்னாவ – மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதாக நேரகாலத்தோடு அதிகாரிகளினால் அப்பிரதேச மக்கள் அறிவுறுத்தப்பட்டிருந்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த பிரதேச மக்களை அவ்விடங்களிலிருந்து வெளியேறுமாறு கடந்த 05 ஆம் திகதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து குறித்த பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்ட கடிதம் தம்வசம் உள்ளதாகவும் அமைச்சர் உறுதி செய்துள்ள அவர், அப்பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட கடிதத்தை பெற்றுக் கொண்டதை உறுதி செய்யும் வகையில் ஒப்பமிட்ட ஆவணங்களும் கிராம சேவை அதிகாரியிடம் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புக்களை விட்டு விட்டு, கலந்துரையாடல் மூலம் அரசாங்கத்துடன் இணைந்து எழுந்துள்ள பிரச்சினைக்கு முகம் கொடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் அப்பிரதேச மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

(rizmira)