மீதொட்டுமுல்ல அனர்த்தம் – பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை ஜூலை மாதம் நிறைவுக்கு..

மீதொட்டுமுல்ல குப்பை மேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ஜூலை மாதமளவில் நிறைவுக்கு வரும் என நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் அண்மையில் இடம்பெற்ற வெள்ள ,மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் தாமதமாகியுள்ளதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)