மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் சுமார் 10 பேர் பலி..

மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்கு உள்ளானதினால் கொழும்பில் குப்பைகள் தேங்கும் அவதான நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இன்று(15) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே. ஏ அனுர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்த கலந்துரையாடலின் பின்னர் குப்பைகள் அகற்றுவது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குப்பைகூலங்களை அகற்றுவதற்கான மாற்றுத் தெரிவொன்றை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)