மீனவ சமூகம் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்

(FASTNEWS | COLOMBO) – கொழும்பிலிருந்து காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி காற்றின் வேகமானது 70 – 80 கி.மீ வரையில் வீசக்கூடுமென்றும், மீன்பிடி தொழில்கள் மற்றும் ஏனைய கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.