மீனின் விலை வீழ்ச்சி…

தற்பொழுது நிலவும் காலநிலை காரணமாக தெற்கு கரையோர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து கரையோர பிரதேசங்களிலும் கிடைக்கும் மீனின் தொகை அதிகரித்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர இன்று(26) பேலியகொடயிலுள்ள மத்திய மீன் விற்பனை நிலையத்தின் விற்பானையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போது பலவகையான மீன்கள் பெருமளவில் கிடைப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

தெற்கு கரையோரம் அடங்கலாக நாட்டின் ஏனைய கடற்கரையோர பிரதேசங்களிலிருந்து இந்த மீன்கள் வருவதாக சுட்டிக்காட்டினார்.

முக்கிய மீன்வகைகள் பெருமளவில் கிடைப்பதினால் அவற்றின் விலைகளிலும் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. தற்பொழுது இவ்வாறான மீன்கள் 1 கிலோ 100 ரூபாவிற்கும் 150 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதன்காரணமாக டின்மீன்வகைகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு, நிதியமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது.