நாட்டில் உள்ள 10 மீன்பிடித் துறைமுகங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சித் தலைமை காரியாலயத்தில் இன்று(12) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போது, அதன் பிரச்சாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
169 கோடி ரூபாய்க்கு குறித்த இந்தத் துறைமுகங்கள் குத்தகைக்கு விடப்படுகின்றது. இவ்வாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படுமாக இருந்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(rizmira)