மீன்பிடிப்படகு தீப்பிடித்தமை தொடர்பில் ஆராய 04 உறுப்பினர்கள் கொண்ட குழு நியமனம்… Update

மீன்பிடி படகு தீபற்றியமை குறித்த விவகாரத்தை கவனிப்பதற்கு மீன்வள மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் ஜகத் பி. விஜயவீரவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

——————————— Update

திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற படகில் தீப்பறவல்…

திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ‘ஜனத் புத்தா -02’ மீன்பிடி படகு ஹிக்கடுவையிலிருந்து 51Km தூரத்தில் இன்று(22) தீப்பற்றியுள்ளதாக, மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தகர் ஒருவரால் மீன்பிடி அமைச்சுக்கு மானியத்தின் கீழ் வழங்கப்பட்ட இரண்டு படகுகளும், முதலாவது பயணத்தை ஆரம்பித்த வேளையிலேயே குறித்த இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

60 அடி நீளமான குறித்த படகின் பெறுமதி 30 மில்லியன் ரூபாய் பெறுமதியானது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளதுடன், இதில் பயணித்த மீனவர்கள், “ஜனத் புதா – 01 இல் சென்ற மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

-Rishma