மீன்பிடிப் படகு விபத்து – மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு..

ஹம்பாந்தோட்டை கிரிந்த கடற்பரப்பில் கப்பலொன்றில் மோதி மீன்பிடிப்படகொன்று விபத்துக்குள்ளானதில், படகில் இருந்த 5 மீனவர்கள் மற்றுமொரு மீன்பிடிப் படகின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(20) அதிகாலை ‘சதவ் -1’ என்ற படகு விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த மீனவர்கள் ‘மதுஷ 2’ என்ற மீன்பிடி படகு மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காப்பாற்றப்பட்ட மீனவர்கள் தற்போதைய நிலையில் ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகம் நோக்கி அழைத்து வரப்படுவதாக மீன்பிடித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.