(FASTNEWS|COLOMBO) கிண்ணியா – உப்பாறு பிரதேசத்தில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது பெருந்தொகையான மீன்கள், சட்டவிரோத வலைகள், படகு என்பவற்றையும் கடற்படையினர் கைப்பறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.