பாராளுமன்றத்தில் மீன்பிடி தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்று எதிர்வரும் 6ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.