மீன் ஏற்றுமதித்தடை நீக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தையில் சர்ச்சை (UPDATE)

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடையை நாளை மறுநாள் தொடக்கம் விலக்கிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக நேற்றையத்தினம்(19) மதியம் கடற்றொழில் அமைச்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ,  சில மணித்தியாலத்தின் பிறகு அது விலக்கிக்கொள்ளப்படவில்லை என அந்த அமைச்சு மேலும் ஊடக அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

கடற்றொழில் அமைச்சின் ஊடக இணைப்புச் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்று பிற்பகல் அமைச்சினால் முதலில் வௌியிட்ட ஊடக அறிக்கையில் , இலங்கை மீன் ஏற்றுமதி மீது சுமத்தப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் 21ம் திகதி முதல் விலக்கிக்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் , அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஊடக அறிக்கையை வௌியிட்ட அந்த அமைச்சு , இலங்கை மீன் ஏற்றுமதி தடை தொடர்பாக நாளை மறுநாள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடாத்தப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.