மீன் ஏற்றுமதித் தடை உத்தியோகபூர்வமாய் நீங்க இன்னும் இருவாரங்கள் செல்லும் – மீன்பிடி அமைச்சு

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உத்தியோகபூர்வமாக நீக்க மேலும் இரு வாரங்கள் வரை ஆகும் என, மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மீன் ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

அது எவ்வாறு இருப்பினும் இந்த யோசனை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், அது தொடர்பிலான எழுத்து மூல அறிவிப்பு இலங்கைக்கு வழங்கப்படும்.

அதன் பின்னர் இது தொடர்பிலான ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டதும், இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியத்தால் உத்தியோகபூர்வமாக விலக்கிக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதற்கு இன்றும் இரு வாரங்கள் வரை செல்லலாம் என கூறப்படுகின்றது.