மீன் ஏற்றுமதி மூலம் அமோக வருமானம்…

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக அந்த நாடுகளுக்கான மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த 2016 ஜூலை – 2018 மார்ச் வரையான 21 மாத காலத்தில் 58,578.09 மெட்ரிக் டொன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் 92,117 மில்லியன் ரூபா அந்நிய செலாவணி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த 2014ம் ஆண்டுக்கு காலத்தில் 26,320 மெட்ரிக் டொன் மீன்களே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.