கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நாட்டின் மீன் பொதியிடல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 34 இல் இருந்து 68 ஆக அதிகரித்திருப்பதாக கடற்றொழில் நீரியில் வள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த மீன் ஏற்றுமதிக்கான தடையின் காரணமாக நாட்டின் மீன் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்திருந்ததுடன் மீன் பொதியிடல் தொழிற்சாலை பெருமளவு மூடப்பட்டிருந்தது.
கடந்த காலப்பகுதியில் மீன் ஏற்றுமதி மற்றும் அதன் மூலமான வருமானம் அதிகரித்ததைத் தொடர்ந்து மீன் பொதியிடல் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
நாட்டின் ஏற்றுமதி செய்யப்படும் டுனா மீனை போன்று இறால், நண்டு போன்றவற்றுக்கு சர்வதேச ரீதியிலுள்ள கோரிக்கை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.