இலங்கை கிரிக்கெட் அணியின் மந்த நிலையினை கருத்தில் கொண்டு குமார் சங்கக்கார’வை மீளவும் இலங்கை அணியில் சேர்ப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு கவனம் செலுத்தியுள்ளதாக சிங்கள பிரபல செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2015 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு பின்னர் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரியாவிடை அளித்த குமார் சங்கக்கார மீளவும் சாம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியினை தலைமை தாங்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கிரிக்கெட் தகவல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டும் ஏப்ரல் முதலாம் திகதி இவ்வாறான செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.