நாம் உண்ணும் பப்பாளி பழத்தால் உடலின் உட்புற செயல்பாடுகள் மட்டுமின்றி வெளிப்புறத்திற்கும் பெரும் நன்மை அளிக்கிறது.
சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பால், நம்மில் பல பேர் நிறைய மன வருத்தத்திற்கு உள்ளாகியிருப்போம். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம்.
# பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.
# பப்பாளி பழமும், எலுமிச்சை பழமும் சருமத்தை பளிச்சென்று வைக்க உதவும். நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.
# பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.
# பப்பாளி பழத்தை அழகிற்கு மட்டும் பயன்படுத்தாமல் தொடர்ந்து சாப்பிட்டும் வர வேண்டும். அது இளமையை பாதுகாக்க உதவும்.