முகத்தில் உள்ள கரும்புள்ளியைப் போக்க இத ட்ரைப் பண்ணிப்பாருங்க…

பொதுவாக பரு என்றால் நாளடைவில் அதுவாக மறைந்துவிடும் என்கிற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. பருவைத் தவிர முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறையவே மறையாது. அப்படியே நிலைத்து விடும் என்றும் சொல்லப்படுகிறது இது தவறானது. முகத்தை முறையாக பராமரித்தால், சில குறிப்புகளை பின்ப்பற்றினால் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீங்கச் செய்திடலாம்.

பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.வாரம் இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.

தேன் :
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து 02 நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

க்ரீன் டீ :
க்ரீன் டீயில் இருக்கும் எண்ணற்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நம் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதற்கு பயன்படுத்திய டீ இலைகளை பயன்படுத்தலாம். க்ரீன் டீ போட்டு குடித்த பின்னர், அதன் இலைகளைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்திடுங்கள்.

எலுமிச்சை சாறு :
தினமும் எலுமிச்சை பாதியாக நறுக்கி அதை அப்படியே முகத்தில் தேய்க்கலாம். அதிக எரிச்சல் இருந்தால் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவலாம். எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றறிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரிக்கும்.

சர்க்கரை :
சர்க்கரை நம் சருமத்தில் இருக்கும் துவாரங்களை எல்லாம் அடைத்து சுருக்கங்களை போக்குகிறது. அதோடு சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தினையும் கொடுக்கிறது. இரண்டு ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கண்களைத் தவிர்த்து முகத்தின் பிற இடங்களில் எல்லாம் போட்டு மசாஜ் செய்ய வேண்டும். ஆல்வி எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெயும் பயன்படுத்தலாம்.