முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும். இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும்.
சில இயற்கை பொருட்களை ஒன்றாக கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும்.
நல்லெண்ணெய்:
நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கம் மாறும்.
சந்தனம்:
சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.
பப்பாளி பழம்:
பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம். இதனால் சரும நிறம் கூடுவதோடு, சருமம் ஈர்ப்பதமாகவும் சுருக்கங்கள் இன்றியும் இருக்கும்.
தக்காளி:
அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும். உங்களது சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
எலுமிச்சை தோல்:
எலுமிச்சையின் தோலை காய வைத்து பொடித்து பன்னீரில் கலந்து தயிர், முள்ளங்கி சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம் பளபளப்பாகும். இது உங்களது இளமையை கெடுக்கும் சுருக்கங்களை போக்கும்.
தேங்காய் எண்ணெய்:
முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணெயில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பாசிப்பயறு மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
தயிர் சருமம்:
மிருதுத்தன்மையை இழந்து விட்டால், தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஃபேஸ் பேக்:
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் ஊற வைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்
பேஷியல் தோற்றத்திற்கு..
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.