நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம்மால் எளிதில் நமது முகத்தின் பிரச்சினைகளை குணப்படுத்தி விடலாம். அதுவும் சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்து இதற்கு அருமையான தீர்வை தந்து விடலாம். குறிப்பாக முகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு நல்ல தீர்வை தருகிறது.
வறட்சியை குறைக்க:
தேவையான பொருட்கள்.
யோகர்ட் 1 ஸ்பூன்
ஓட்ஸ் 1 ஸ்பூன்
சர்க்கரை வள்ளி கிழங்கு பாதி
செய்முறை :- முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஓட்ஸ் மற்றும் யோகர்ட் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கி விடும்.
வெண்மையாக வைக்க: முகத்தை வெண்மையாக மாற்ற சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து முகத்தில் நேரடியாக பூசவும். முகத்தின் கருமையை குறைத்து வெண்மையாக மாற்றி விடும் தன்மை கொண்டது. அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகளையும் அகற்றி விடும்.
தேவையானவை.
சர்க்கரை வள்ளி கிழங்கு பாதி
தேன் 1 ஸ்பூன்
செய்முறை :- வள்ளி கிழங்குடன் தேன் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள அந்தோசைனின் முகத்தின் கருமையை நீக்குவதுடன் எண்ணெய் வடிதலையும் குறைக்கும்.
கண்கள் வீங்கினால்:
எப்போதும் கணினியை பயன்படுத்துவோர்க்கு கண்கள் வீங்கிய படி இருக்கும்.
வள்ளி கிழங்கை வேக வைத்து இரண்டு பங்காக அரிந்து கண்களின் மேல் வைத்து கொள்ளவும் 20 நிமிடம் கழித்து இதனை எடுத்து விடலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
* முகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை சர்க்கரை வள்ளி கிழங்கு தருவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன. அதாவது, இவற்றில் உள்ள விட்டமின் சி, டி, இரும்பு சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை தான் முதன்மையான காரணமாக உள்ளது. எனவே, இதனை சாப்பிட்டாலும் அப்படியே முகத்தில் பூசினாலும் நல்ல பலனை தரும்.