முகத்தில் கூடுதலாக எண்ணெய் வழியுதா?… இதோ அட்டகாசமான டிப்ஸ்…

கோடை தான் வெயிலின் உச்சக்கட்டத்தை தொடும் காலமிது. வீட்டிலிருக்கும் போதும் வீட்டை விட்டு வெளியேறும் போதும் ஒவ்வொரு நிமிடமும் வியர்வையோடு நம் நாட்களை கடத்தவேண்டியுள்ளது .

குறிப்பாக எண்ணெய் பசை தோல் உடையவர்களுக்கும் முகப்பரு பாதிப்பு தோல் உடையவர்களுக்கும் , இந்த பருவத்தில்தான் அனைத்து வகையான தோல் பிரச்சினைகளை நம் சந்திக்க வேண்டி வருகிறது.

அரிசி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு
மஞ்சள் தேன்
வெள்ளரிக்காய் சாறு

தயாரிப்பது: அரிசி மாவு 3 தேக்கரண்டி, தேங்காய் துருவல், 1 டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட் செய்ய வேண்டும். உடல் முழுவதும் பயன்படுத்த அதிகளவில் தயார் செய்துகொள்ளலாம்.

பாதம் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்:
தேவையான பொருட்கள்
பாதாம்
தேன்

தயாரிப்பது:10 பாதாம் பருப்புகளை ஓர் இரவு முழுமைக்கும் ஊற வைத்து, அடுத்த நாள் காலை நன்றாக பசையை அரைக்கவும். ஒரு டீஸ்பூன் தேன் கலந்து இதை உங்கள் முகத்தில் தடவவும்.15 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். இந்த கலவை சாப்பிடுவதற்கும் ஏற்றது , இதை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது நல்ல பலன்களை பெறலாம்

தக்காளி ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்
தக்காளி சாறு
அரிசி மாவு
தேன்

தயாரிப்பது: தக்காளி எண்ணெய் தோல் உள்ளவர்களுக்கு ஏற்றது. வெறும் 3 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் தேன் 1 தேக்கரண்டி சேர்த்து சில புதிய தக்காளி சாருடன் கலக்கி பயன்படுத்தலாம். மாற்றாக, நீங்கள் தக்காளி (சதைப்பகுதி) முகத்தில் 15 நிமிடங்கள் ஒரு வட்ட இயக்கத்தில் தேய்க்க வேண்டும். இதுவும் நல்ல பலனை தரும்