முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளி உடனே மறையனுமா? இத ட்ரை பண்ணி பாருங்க

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளியை வெள்ளரிக்காய் உதவியுடன் எப்படி போகச் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வெள்ளரிச்சாறு :
வெள்ளரியை அரைத்து ஜூஸாக்கி உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை உடனடியாக குறைத்திடும். இதனை தினமும் கூட செய்யலாம். ஒரு வெள்ளரியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். காட்டனில் அந்த ஜூஸை முக்கியெடுத்து முகம் முழுவதும் துடைத்தெடுங்கள். மீதியிருக்கும் ஜூஸை ப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

வெள்ளரி :
வெள்ளரியை பச்சையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் வெள்ளரியை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். சுமார் இரண்டு மணி நேரம் வரை ஊறிய பிறகு அந்த தண்ணீரை எடுத்து குடிக்கலாம்.அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீருடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்துமுகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போடலாம்.

வெள்ளரி மற்றும் தயிர் :
சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்திடும். அதே சமயம், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிட உதவிடும். வெள்ளரியை தோல்நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மூன்று ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கழுவிடலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

வெள்ளரி,ஆப்பிள்,பேக்கிங் சோடா மற்றும் தேன் :
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். ஆப்பிளை தோல் சீவி ஆப்பிள் மற்றும் வெள்ளரி இரண்டையும் பாதியளவு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த அந்த கலவையுடன் தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திட வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் கழுவிடலாம்.

வெள்ளரி,புதினா, தக்காளி :
வெள்ளரி, சிறிதளவு புதினா இலைகள் மற்றும் தக்காளி மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த கலவையை முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட்டு பதினைந்து நிமிடம் கழித்து கழுவிடலாம்.