ஆஸ்பிரின் ஒரு வலி நிவாரணி மாத்திரை. இந்த மாத்திரை ஒவ்வொருவரது வீட்டிலும் நிச்சயம் இருக்கும்.
ஆஸ்பிரின் மாத்திரையில் உள்ள சாலிசிலிக் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்களை நீக்கும்.
இதனால் முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
ஆஸ்பிரின் மாத்திரை – 5
தண்ணீர் – சிறிது
தேன் – 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து, 1/4 கப் நீர் மற்றும் தேன் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் விரைவில் மறையும்.