பருக்கள் மற்றும் சருமத்தின் எண்ணெய் பசையை நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை பார்ப்போம்.
அதிகமான பருக்கள் இருக்கும்போது வாரத்திற்கு 2 முறை இதனை மேற்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள்
லவங்க பட்டை
க்ரீன் டீ
தண்ணீர்
க்ளென்சர் பயன்படுத்தி முகத்தை அழுக்கில்லாமல் கழுவி கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 3 அல்லது 4 லவங்க பட்டை , 1 ஸ்பூன் க்ரீ டீ ஆகியவற்றை போடவும். பிறகு அடுப்பை அணைக்கவும். ஒரு ஸ்பூனால் அந்த நீரை நன்றாக கலக்கவும். கொதிக்கும் நீர் நல்ல மஞ்சள் நிறத்தில் தோன்றும்.
இப்போது அந்த நீரில் இருந்து வரும் ஆவியை நீங்கள் நுகர தொடங்கலாம். தண்ணீர் மிக அதிகமாக கொதிக்க கூடாது. அது சருமத்தை சேதமடைய செய்யும். ஓரளவு ஆவி வரும் அளவுக்கு கொதிக்க வைப்பது நல்லது.
சென்சிடிவ் சருமமாக இருந்தால் 8-10 நிமிடங்கள் ஆவி பிடிப்பது நல்லது.
எண்ணெய் சருமமாக இருக்கும்போது 20 நிமிடங்கள் செய்யலாம். கண்களை மூடிக்கொண்டு ஆவியை முகத்தில் நன்றாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த எளிய முறை நீராவி பேஷியலை செய்வதன் மூலம் பருக்கள் குறைந்து, எண்ணெய் பசை சருமம் பொலிவாக காணப்படும்.