முகமூடி விவகாரம்.. – ICC இடம் இலங்கை கிரிக்கெட் சபை முறைப்பாடு..

டில்லி காற்று மாசுபாடு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கைக் கிரிக்கெட் வாரியம் முறைப்பாடு செய்துள்ளது.

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டில்லியில் நடந்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளில் காற்று மாசுபாடு காரணமாக, இலங்கை வீரர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகப் முறைப்பாடு எழுந்தது.

இதனால், முகமூடி அணிந்து கொண்டு இலங்கை வீரர்கள், இரண்டாவது நாளில் களத்தடுப்பு செய்தனர்.

இதனால், இந்திய அணி, இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருந்த நிலையில், போட்டி நடத்தப்பட்டதாகக் கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இலங்கைக் கிரிக்கெட் வாரியம் முறைப்பாடு அளித்துள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரா தெரிவித்தார்.

 

-reeshmaa