இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தின் பிரதி ஒன்று லண்டனில் செயற்படும் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
58 பக்கங்களைக் கொண்ட இந்த பயங்கரவாதத் தடைச்சட்ட மூலத்தின் பிரதி நேற்று குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புதிய சட்டமூலம் மக்கள் தெரிந்து கொள்வதற்காக இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரபல நபர் ஒருவருக்கு இந்த சட்ட மூலம் கிடைத்துள்ளதாக லண்டன் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிகவும், இரகசியத் தன்மையுடையது என கருதப்படும் அம்சங்களும் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தின் கீழ், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையும், சொத்துக்கள் பறிமுதல் போன்றவைகளும் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
