முக்கோணத்தொடரில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது ஆஸி அணி

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் ஆஸ்திரேலியா 142 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில் தெ.ஆப்பிரிக்கா 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இன்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். நேற்று நடந்த 3–வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. நாணயத்  ஜெயித்த தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா திணறியது. 112 ரன்னுக்கு 6 விக்கெட்டை (28.2) இழந்தது.

பெஹர்தின் ஆட்டத்தால் 150 ரன்னை கடந்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 189 ரன்னே எடுத்தது. பெஹர்தின் 62 ரன் எடுத்தார்.

எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா சரிவை சந்தித்தது. தென் ஆப்பிரிக்காவில் அபாரமான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியவாறு இருந்தனர். தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் மட்டுமே நிலைத்து நின்றார்.

அந்த அணி 22.5 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 90 ரன் எடுத்து இருந்தது. 9–வது விக்கெட்டாக ஆரோன் பிஞ்ச் (72 ரன்) அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 34.2 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் போனஸ் புள்ளியை சேர்த்து 5 புள்ளியுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளன.