முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று..

பங்களாதேஷில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று(27) மிர்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணியின் இரண்டு பந்து வீச்சாளர்களுக்கு இன்று இடம்பெறவுள்ள போட்டியில் 100 ஆவது மற்றும் 150 ஆவது விக்கட்டுக்களை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளமையும் விசேட அம்சமாகும்.

சுரங்க லக்மால் ஒருநாள் போட்டிகளில் 100 ஆவது விக்கட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், திஸர பெரேராவுக்கு 150 ஆவது விக்கட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sri Lanka:

Danushka Gunathilaka, Upul Tharanga, Kusal Mendis, Niroshan Dickwella(wk), Dinesh Chandimal(capt.) Asela Gunaratne, Thisara Perera, Akila Dananjaya, Suranga Lakmal, Lakshan Sandakan, Dushmantha Chameera

Bangladesh :

Tamim Iqbal, Imrul Kayes, Shakib Al Hasan, Mushfiqur Rahim (wk), Mahmudullah, Sabbir Rahman, Nasir Hossain, Abul Hasan, Mashrafe Mortaza (capt), Mustafizur Rahman, Rubel Hossain.

#rishma