பங்களாதேஷில் இடம்பெறவுள்ள இலங்கை பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முக்கோண கிரிக்கட் தொடரில் இணையவுள்ள இலங்கை அணி தொடர்பான தெரிவு, எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களை தெரிவு செய்வதற்காக இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்தன ஹத்துருங்கவின் கீழ் 23 வீரர்கள் கொண்ட குழு, கடந்த 28 ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் தமது பயிற்சிகளை ஆரம்பித்தனர்.
எனினும் இந்திய அணியுடன் இடம்பெற்ற T-20 போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்தியூஸின் உடற் தகுதி சோதனை எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், உடற் தகுதி பெருபேறுகளுக்கு அமைய அவர் முக்கோண தொடரில் இணைக்கப்படுவாரா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படவுள்ளதாக கிரிக்கெட் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும், இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் உபாதைக்கு உள்ளான தனஞ்சயடி சில்வா பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பயிற்சிகளை ஆரம்பித்த 23 வீரர்களின் பட்டியலில் தனஞ்சயடி சில்வா இணைத்து கொள்ளப்படவில்லை.
குறித்த 23 வீரர்களின் விபரம் பின்வருமாறு…
திஸர பெரேரா, உப்புல் தரங்க, தனுஸ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தினேஸ் சந்திமால், அஞ்சலோ மெத்தியூஸ், குசல் பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, சதீர சமரவிக்கிரம, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், தசுன் சானக, லஹிரு கமகே, விஸ்வ பெர்ணான்டோ, துஸ்மந்த சமீர, சேஹான் மதுசங்க, லஹிரு குமார, அகில் தனஞ்சய, ஜெப்ரி வென்டசே, லக்ஷான் சந்தகேன், சதுரங்க சில்வா
#reshma