முக்கோண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி..

(FASTNEWS| COLOMBO) – பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முக்கோண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக குறித்த போட்டி 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 24 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, டக்வர்லுயிஸ் முறைமைக்கு அமைய பங்களாதேஷ் அணிக்கு, 24 ஓவர்களில் 210 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 22.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 213 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கட்டுக்களினால் வெற்றியடைந்தது.