முச்சக்கரவண்டி சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு முன்னர், அவர்களை தெளிவூட்டும் செயலமர்வு திட்டமொன்று இன்று(18) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேறஹேர சாரதி அனுமதி பத்திரம் வழங்கும்ம் பகுதியில் குறித்த இந்த செயலமர்வு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
போக்குவரத்து அமைச்சினால் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில், சாரதி அனுமதி பத்திரம் பெறவுள்ள அனைத்து முச்சசக்கரவண்டி சாரதிகளும் இனிவரும் காலங்களில் தெளிவூட்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)