இலங்கையில் முச்சக்கர மற்றும் மோட்டார் கார்களுக்கு பதிலாக புதிய வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளதாக, திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பத்தில் பொருளாதார ரீதியில் இலாபத்தை பெற்று கொடுக்கும் இந்த வாகனம் தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஏற்படுகின்ற விபத்து காரணமாக வருடாந்தம் பாரிய அளவு உயிர்கள் கொல்லப்படுகின்றன. பலர் ஊனமுற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அதற்கு தீர்வாக, Quadry Cycle என்ற நான்கு சக்கர வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 10 இலட்சத்திற்கும் அதிகான முச்சக்கர வண்டிகளின் பயன்பாடு காரணமாக, ஏற்படுகின்ற விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தில் யோசனை செய்யப்பட்டதற்கமைய இந்த வாகனம் அறிமுகப்படுத்தி வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை இலங்கை வீதிகளில் இலகுவாக பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)