முச்சக்கர வண்டிகளுக்கான தனியான அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ராகம நகரின் முச்சக்கர வண்டி ஒழுங்குறுத்தல் வலயமாக பிரகடனம் செய்யும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய மன்றம் தேசிய அதிகார சபையாக மாற்றப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் கீழ் ராகம நகரிலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஓய்வூதிய முறையொன்றை அறிமுகஞ்செய்தல், 25 வருடங்களிற்கு மேலாக தொடர்ச்சியாக முச்சக்கர வண்டி சாரதியாக செயற்பட்டவர்களை கௌரவித்தல், ராகம பகுதியிலுள்ள மூத்த முச்சக்கர வண்டி சாரதியை கௌரவித்தல் ஆகியன நடைபெற்றது.