பயணிகளுக்கு கட்டணப் பட்டியலை வழங்க முடியாத முச்சக்கர வண்டி சாரதிகள் உரிய தகவல்கள் அடங்கிய கட்டணப் பட்டியலை வழங்கலாம் என
வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
++++++++++++++++++++++++++++++++ Update
முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று(20) முதல் கட்டாயம் – மீறினால் கைது…
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இன்று(20) முதல் கட்டாய நடைமுறைக்கு வருகிறது.
குறித்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்ட சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் அதற்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டு கடந்த 01ம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் சலுகை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Rishma